பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ளார். இதற்கிடையே, ரியாத் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடிக்கு சவுதி அரேபியா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை அங்கு நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவனத்தின் மூன்றாவது அமர்வில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
இதையடுத்து பிரதமர் மோடி சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல்சாத், இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தையும் சந்தித்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு கொள்முதல், சிவில் விமானப் போக்குவரத்து, நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12 ஒப்பந்தங்களைக் கையெழுத்திடுவார் என்று ரியாத் இந்திய தூதர் ஆசாஃப் சயீத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா வந்த சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் ரூபாய் 7 லட்சம் கோடி அளவுக்கு இந்தியாவில் பாதுகாப்பு, வர்த்தகம், கலாசாரம், கல்வி ஆகியவற்றில் முதலீடுகள் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டது போன்று, பிரதமரின் இந்த இரண்டு நாள் பயணத்திலும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ரியாத்தில் நடக்கும் முதலீடுகள் தொடர்பான மாநாட்டிலும் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ள மோடி இந்தியாவில் முதலீடுகள் செய்ய அந்நாட்டு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க: