இதுகுறித்து அல் மசீரா ஊடகத்தில் (ஹவுத்தி கட்டுப்பாட்டில் உள்ள ஊடகத்தில்) வெளியான செய்திக் குறிப்பில் ஹவுத்தி செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது: ’சவுதி-ஏமன் எல்லையை ஒட்டியுள்ள நஜ்ரன் மாகாணத்தில் 72 மணி நேரத்துக்கு முன்பாக நாங்கள் தாக்குதல் நடத்தினோம். ஆளில்லா விமானம், ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: சவுதியின் 20 ராணுவத் தளங்களைக் கைப்பற்றிய ஹவுத்திகள்!
மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சவுதி படையினரைச் சிறைபிடித்துள்ளோம். சிறைபிடிக்கப்பட்ட வீரர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை ரகசிய இடங்களில் அடைத்துள்ளோம்" என்றார்.
ஹவுத்திகளின் இந்த அறிவிப்புக்கு சவுதி அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.
சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய் வயல், எண்ணெய் ஆலை மீது செப்டம்பர் 14ஆம் தேதி நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரபியா மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என கடந்த வாரம் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். இந்தச் சூழலில் தான், ஹவுத்திகளில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. இது வளைகுடா நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சவுதி கச்சா எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் - பெரும் பாதிப்பை சந்திக்கும் இந்தியா?
ஏமனில் என்ன நடக்கிறது?
மத்திய கிழக்கு நாடான ஏமனின், ஹவுத்தி (Houthi) கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது.
ஏமன் தலைநகர் சனா, அந்நாட்டின் பெரும்பாலான வடக்குப் பகுதிகள் ஹவுத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் போரில், சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் ஏமன் அரசுக்கு உதவி வருகின்றனர்.
போரில் உக்கிரத்தில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் அத்தியாவசியப் பொருட்கள் ஏதும் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏமன் உள்நாட்டுப் போர் உலகில் மனிதர்களுக்கு எதிராக நடைபெறும் மோசமான பிரச்னை என ஐநா கவலை தெரிவித்துள்ளது.