ETV Bharat / international

வானில் எப்போது திரும்பும் இயல்பு நிலை?

விமானப் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப 18 முதல் 24 மாதங்கள் வரை ஆகலாம் என்று துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நிர்வாக இயக்குநர் பால் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

Dubai airpot
Dubai airpot
author img

By

Published : May 15, 2020, 11:39 AM IST

கோவிட்-19 தொற்று காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகில் மிகவும் பிஸியான விமான நிலையமாகத் திகழ்ந்த துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இப்போது மயான அமைதி நிலவுகிறது.

இந்நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அடுத்த வாரம் முதல் தனது சேவையைப் படிப்படியாகத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து துபாய் சர்வதேச விமான நிலைய நிர்வாக இயக்குநர் பால் கிரிஃபித்ஸ் கூறுகையில், "இதுவரை அதிகப்படியான பயணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் பரிசோதிக்கக் கூடிய ஒரு சோதனைக் கருவி கண்டுபிடிக்கப்படவில்லை.

கரோனா தொற்றுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கும் வரை விமானப் போக்குவரத்து குறைவாகவே இருக்கும். இயல்பு நிலை மீண்டும் திரும்ப 18 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை ஆகலாம் என்று சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் இவை எல்லாம் அனுமானம்தான். யாருக்கும் இவை எப்போது முடியும் என்று உறுதியாகத் தெரியாது" என்றார்.

2019ஆம் ஆண்டு மட்டும் 86.4 மில்லியன் பயணிகள் துபாய் விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், துபாய் விமான நிலையத்தில் 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விமானப் போக்குவரத்து 20 விழுக்காடு வரை குறைந்துள்ளது. இப்போது விமானப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தாலும், சரக்கு மற்றும் சிறப்பு விமானங்களின் சேவை தொடர்கிறது.

மே 2ஆம் தேதி முதல் உலகில் சில முக்கிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கவுள்ள நிலையில், விமான நிலையத்தில் நுழைபவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம், கையுறைகளைக் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளின் உடல்வெப்ப நிலையைக் கண்காணிக்கத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், வெப்பநிலை மட்டுமே கண்காணிக்கப்படுவதால், எவ்வித அறிகுறிகளும் இல்லாதவர்களால் (asymptomatic) கரோனா பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து பால் கிரிஃபித்ஸிடம் கேட்டபோது, "கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். சரியான சூழ்நிலை அமையும்போது, அதிகப்படியான மக்களுக்குப் பரிசோதனைகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும், 1991 வளைகுடா போர், இரட்டைக் கோபுரத் தாக்குதல் போல இந்தத் தொற்று காரணமாகவும் விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை பெரும் சரிவைச் சந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நிலை படிப்படியாக மாறி விமானப் போக்குவரத்து விரைவில் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘ஜிஎஸ்டி குறைப்பு கேட்க இது சரியான தருணம் அல்ல’ - மாருதி சுசூகி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.