ETV Bharat / international

கோவிட் - 19: பரபரப்பான சூழலில் ஜி-20 நாடுகள் இன்று ஆலோசனை - கரோனா வைரஸ் ஜி - 20 நாடுகள்

ரியாத்: கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வது குறித்தும், இதன் தாக்கத்தால் ஏற்படும் பொருளாதார சிக்கலை சீரமைக்கும் திட்டம் குறித்தும் ஜி-20 நாடுகள் இன்று விவாதிக்கவுள்ளன.

KSA
KSA
author img

By

Published : Mar 26, 2020, 9:45 AM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் கடந்த இரு வாரங்களில் தீவிரமாக அதிகரித்துவருகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் சீனா, ஈரான், தென் கொரியா போன்ற சில நாடுகளில் மட்டுமே வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால் மார்ச் மாதத்தில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்கா என உலகின் அனைத்து பகுதிகளிலும் நோய் பரவல் வேகமடைந்ததையடுத்து, உலக சுகாதார அமைப்பு கரோனாவை உலக பெருந்தொற்று என அறிவித்தது.

இந்த பெருந்தொற்றை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என அனைத்து துறை வல்லுநர்கள் சார்பிலும் வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், உலகின் 20 முன்னணி பொருளாதார சக்திகளின் கூட்டமைப்பான ஜி-20 நாடுகளின் அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் காணொலி கட்சி மூலம் பங்கேற்கின்றனர்.

சவுதி அரேபிய அரசர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் அல் சவுத் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கோவிட் -19 பெருந்தொற்று தடுப்பு குறித்தும், அதன் பொருளாதார தாக்கத்தை சீர் செய்வது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த அமைப்பில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனாடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கரோனா வைரஸ் சீனாவிலிருந்தே உலக நாடுகளுக்குப் பரவியுள்ளதையடுத்து, சீனா இந்த விவாகரத்தின் தீவிரத்தை உலக நாடுகளிடம் மறைக்க முற்பட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிவருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இதை சைனீஸ் வைரஸ் என சீனாவைச் சீண்டும் விதத்தில் பேசிவருகிறார். ஜி-20 கூட்டத்தில் தலைவர்கள் கரோனாவை வூஹான் (சீன மாகாணம்) வைரஸ் எனக் குறிப்பிட்டு பேச வேண்டும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த செயல்பாடுகள் சீனாவிற்கு ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திவருகிறது. எனவே, ஜி-20 கூட்டத்தில் இரு நாடுகளின் செயல்பாடும் எவ்வாறு இருக்கும் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன.

இதையும் படிங்க: எங்களுக்கு உதவிய இந்தியாவுக்கு உதவத் தயார் - சீனா வாக்குறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.