2018 ஜனவரி 9ஆம் தேதி, துருக்கியிலிருந்து தென்னாப்பிரிக்காநாடான ஜிபூட்டிக்கு சென்ற படகில் வெடிமருந்து இருந்தாக ஐந்துஇந்தியர்கள்கிரீஸ் நாட்டுகடற்படையினரால்கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், ஐந்து பேரை தாயகம் கொண்டுவரும் முயற்சியில் இந்திய கப்பல் துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
படகில் பட்டாசு தயாரிப்பதற்கான் மூலப்பொருள் மட்டுமே இருந்தது என ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதையடுத்துஐந்துபேரும் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து, 14 மாதங்கள் சிறை வாசத்திற்கு பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பை வந்த அவர்களுக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.