துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான தியர்பாகிரில் இன்று அதிகாலை குண்டு வைத்து கார் தகர்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் தடை செய்யப்பட்ட குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. துருக்கியிலுள்ள தியர்பாகிர் மாகாணம் குர்திஷ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
இந்த மக்கள் 1984ஆம் ஆண்டு முதல் துருக்கி அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
கடந்தாண்டு 31 குர்து மேயர்கள் துருக்கி அரசாங்கத்தால் பதவி நீக்கப்பட்டனர். குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியுடன் தொடர்பில் இருந்ததால் அவர்கள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதில் தியர்பாகிர் முன்னாள் ஆளுநரான அட்னான் செல்குக்கும் ஒருவர். குர்திஷ்தான் கிளர்ச்சி குழுவில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் அவர் உறுப்பினராக இருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.