சிரியா நாட்டில் உள்ள அஃப்ரின் நகரில் உள்ள முக்கிய சந்தையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அச்சமயத்தில், சந்தையை நோக்கி வந்த டிரக் மூலம் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கர வெடி விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
"வெள்ளை ஹெல்மெட்" என்ற தலைப்பில் தீயணைப்பு வீரர்கள் தீப்பிடித்ததை எதிர்த்துப் போராடும் புகைப்படங்களை சிரிய சிவில் பாதுகாப்பு மீட்புப் பணியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில், கருப்பு புகை மண்டலம் சூழ்ந்திருக்கும் சமயத்தில் ஆம்புலன்ஸ், காவல் துறை வாகனங்கள் சைரன்கள் ஒலித்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிரியா குண்டு வெடி விபத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு உதவும் துருக்கி!