சீனாவின் வூகான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் (தீநுண்மி) இந்தியா, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய உலக நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகள் ஊரடங்கை நீட்டித்துவருகின்றன.
இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்காததால் நாளுக்கு நாள் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு மருந்தைக் கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிரமாகப் போராடிவருகின்றன. அனைத்து முயற்சிகளும் வீணாகும் வகையில் எந்த ஒரு மருத்துவக் கண்டுபிடிப்பு பயனளிக்கவில்லை.
இந்நிலையில் புதிதாக கோவிட்19க்கு தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக சீனா நேஷனல் பயோடெக் குழுமம் தெரிவித்துள்ளது. 1,120 தன்னார்வலர்களைப் பயன்படுத்தி இரண்டு கட்டமாக இந்தத் தடுப்பூசியை பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டது.
கோவிட்-19க்கு எதிராக உயர்-டைட்டர் ஆன்டிபாடிகளை இந்த தடுப்பூசிகள் உருவாக்கியதாக சீனா நேஷனல் பயோடெக் குழுமம் கூறியுள்ளது. இந்தப் பரிசோதனை ஏப்ரல் 27ஆம் தேதி அன்று தொடங்கியது என்றது.
இதையும் படிங்க: கல்யாணம் நடத்தி 100 பேருக்கு கரோனா பரப்பிய குடும்பம் - ரூ.6.26 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!