கைரோ: எகிப்து தலைநகர் கைரோவிலுள்ள மெடிடேரிரியன் சிட்டியில், இன்று காலை சுமார் ஒன்பது மாடி அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டினர்.
இந்த மீட்புப் பணியில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 24 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றனர்.
மேலும், விபத்து நடந்த இடத்திற்கு பொறியாளர்கள் அடங்கிய குழு விரைந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எகிப்தில் கட்டட விபத்துகள் சாதரணமாக காணப்படுகிறது. இங்கு கட்டடங்கள் உரிய திட்டங்கள் கொண்டு கட்டப்படாததே இதற்கு காரணம் என பல தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.