சீன மருந்து நிறுவனமான சினோபார்ம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியை பஹ்ரைன் நாடு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனைகளில் சினோபார்ம் தயாரித்துள்ள தடுப்பூசி 86 விழுக்காடு பலன் அளித்ததாக பஹ்ரைன் தேசிய சுகாதார ஒழுங்காற்று வாரியம் கூறியுள்ளது.
சுமார் 42 ஆயிரத்து 299 தன்னார்வலர்களின் உடலில் இந்த தடுப்பூசியை பரிசோதித்ததில், மிதமான மற்றும் கடுமையான அறிகுறிகள் உடையவர்களிடம் 100 விழுக்காடு செயல்திறனும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் 99 விழுக்காடு செயல்திறனும் வெளிப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
16 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பஹ்ரைனில் இதுவரை 89 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 341 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: பிரிட்டனுக்குப் பின் பஹ்ரைன்: ஃபைசர் கரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல்