ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது பால்க் (Balkh) மாகாணம். அங்குள்ள மசா-ஐ-ஷரிஃப் (Mazza-i-Sharif) நகரிலிருந்து ஜவாஜ்ஜான்(Jawazjan) மாகாணம்நோக்கி அந்நாட்டுதுணை அதிபர் அப்துல் ரஷித் தொஸ்தும் பலத்து பாதுகாப்புடன் நேற்று சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவரது பாதுகாப்பு அணிவகுப்பின் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் உயிர் தப்பிய அவரை பாதுகாப்புப் படையினர் அவசர அவசரமாக அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான தாலிபான் பொறுப்பேற்றுள்ளது. மேலும், இதில் நான்கு பாதுகாப்புப்படை வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஆறு பேர் காயமடைந்ததாகவும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் (Zabihullah Mujahid) தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2018 ஜூலை 23ஆம் தேதி காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலிலிருந்து தொஸ்தும் உயிர் தப்பினார். அந்நிகழ்வில் 23 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.