ஏமன் நாட்டு அதிபரான அப்ட்ரப்பு மன்சூர் ஹதிக்கு எதிராக ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு தங்கள் கட்டுப்பாட்டுல் உள்ளதாக அதிபர் தரப்பும், கிளர்ச்சியாளர்கள் தரப்பும் கூறிவருகிறது. ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு பின்னணியில் ஈரான் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிபர் அப்ட்ரப்பு மன்சூர், ஹௌதி ஆதரவு நாடான சவுதி அரேபியா ஒம்ரான் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளதாகவும் இரண்டு குழந்தைகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, வான்வழி மூலம் தாக்குலை நிறுத்தியுள்ளதாக ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தரப்பு தகவல் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, சவுதி அரேபியா ஏமனில் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.