கெய்ரோ: எகிப்து நாட்டின் கிசா மாகாணத்தில் உள்ள எல்-குரேமத் நெடுஞ்சாலையில் நேற்று (மார்ச் 06) மினி பேருந்தின் மீது, திடீரென டயர் வெடித்த சரக்கு லாரி மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்து பேர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து செய்தியறிந்த மக்கள், காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் விபத்து குறித்து கருத்து தெரிவித்த மக்கள் பயணிகளுடன் வந்துகொண்ட பேருந்து தவறான பாதையில் சென்றது. அதன்காரணமாகவே, விபத்து ஏற்பட்டது எனத் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து பேசிய அந்நாட்டு காவல் துறையினர், விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, விபத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், எகிப்தில் சாலை விபத்துகள் சகஜமானதாக மாறியுள்ளது. ஏனெனில் இங்கு சாலைகள் பராமரிப்பு மிக மோசமானதாக உள்ளது எனவும் கூறியுள்ளனர்.