பெஹலாவில் வசித்துவரும் சுவாமி சிவானந்தா கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு எத்திஹாட் ஏர்வேஸ் (Ethihad Airways) விமானத்தில் பயணம் செய்துள்ளார். இந்தப் பயணத்தின் நடுவில் அபுதாபியில் விமானம் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அபுதாபி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சிவானந்தா கடவுச்சீட்டில் (பாஸ்போர்ட்) குறிப்பிட்டுள்ள வயதைக் கண்டு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், 1896ஆம் ஆண்டு பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவானந்தாவின் பிறந்த தேதி சரியாக இருக்கும் பட்சத்தில், உலகளவில் அவர்தான் மிக வயதான நபராக இருப்பார் எனக் கூறப்படுகிறது. மேலும் சிவானந்தாவுடன் விமான நிலைய அலுவலர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
இதைப் பற்றி விசாரிக்கும் போது, சிவானந்தா தினமும்
- உடற்பயிற்சி, யோகா, ஒழுக்கம் ஆகியவற்றை கடைப்பிடிப்பது,
- எண்ணெய், மசாலா, அரிசி சேர்க்காத உணவை மட்டுமே உண்ணுவது
எனப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனால்தான் 123 வயது மதிக்கத்தக்க முதியவர் மாதிரி தெரியாமல் இளமையாகவே தோற்றமளிக்கிறார்.மேலும் சிவானந்தா மூன்று ஆண்டுகளாக கின்னஸ் புத்தகத்தில் நீண்ட காலங்களாக வாழும் மனிதர்களின் சாதனையில் தனது பெயரைப் பதிப்பதற்கு முயற்சி செய்துவந்துள்ளார். ஆனால் அவருடைய வயது, கோயில் பதிவில் மட்டும்தான் குறிப்பிட்டுள்ளதால் நிரூபிக்கமுடியாமல் அவர் தவித்துவருகிறார்.
![yoga did by 123 year oldman](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4686114_airport.jpg)
உலகளவில் நீண்ட காலங்கள் வாழ்ந்த மனிதர் என்ற பெருமையை ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் லூயிஸ் கால்மென்ட்( Jeanne Louise Calment ) பெற்றுள்ளார். எனவே சிவானந்தா தனது பிறந்த தேதியை முறையாக நிரூபித்துவிட்டால் உலகளவில் அதிக நாட்கள் வாழும் பட்டியலில் இடம்பெற்றுவிடுவார்.
இதையும் படிங்க: 344 ஆண்டுகள் வாழ்ந்த ஆமையின் சொகுசு வாழ்க்கை நிறைவு... சோகத்தில் மக்கள்!