சிரியாவில் கடந்த 8 வருடங்களாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் உதவியுடன் சிரிய அரசு, கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை படிப்படியாக கைப்பற்றி வருகிறது.
இந்நிலையில், சிரியாவின் வடமேற்கு மாகாணமான இத்லிப்பின் மார்-அல்-நுமான் நகரில் அரசுப் படையினர் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இரண்டு பெண்கள் உள்பட 10 பேர் பலியானதாகவும், இரண்டு குழந்தைகள் உள்பட பதிமூன்று பேர் காயமடைந்ததாகவும் சிரிய சிவில் பாதுகாப்பு எனும் தன்னார்வல அமைப்பு தெரிவித்துள்ளது.