ETV Bharat / international

"சீனா பெரும் எதிர்ப்பைச் சம்பாதிக்கப்போகிறது" உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஜெனிவா: கரோனா பாதிப்பு உலக நாடுகளை ஆட்டிப்படைத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சர்வதேச அரங்கில் சீனா பெரும் எதிர்ப்பை சம்பாதிக்கப்போவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

WHO
WHO
author img

By

Published : May 18, 2020, 7:32 PM IST

வரலாறு காணாத பேரிடராக கரோனா வைரஸ் பரவல் உலகையே உலுக்கிவருகிறது. 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் மட்டும் மையம் கொண்டிருந்த கரோனா, மார்ச் மாத காலத்தில் உலகப் பெருந்தொற்றாக உருவெடுத்தது.

எதிர்பாராத பேரிடரான கரோனாவைச் சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் முற்றிலும் பரிதவித்துவருகின்றன. உலகளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கும் நிலையில், கரோனா உயிரிழப்பு 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவைச் சேர்ந்த வூஹான் பகுதி வைரசின் பிறப்பிடமாகக் கருதப்படும் நிலையில், சீனா உலக நாடுகளிடம் உண்மையை மறைத்ததாகவும், அதற்கு உலக சுகாதார அமைப்பு துணை போனதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், உலக சுகாதார அமைப்பிற்கு இனி நிதி வழங்கப்போவதில்லை எனவும் அதிரடியாக அறிவித்தார். அமெரிக்காவைப் போலவே ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா என, உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளன. இந்த எதிர்ப்பு வரும் நாட்களில் வெளிப்படையாகவே தெரியவரும் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கானொலி வாயிலாக நடைபெறவுள்ள சர்வதேச கருத்தரங்கில் சீனா, இதை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டவருக்கு கரோனா!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.