ETV Bharat / international

2020 மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது - ஹார்வி ஜே. ஆல்டர் (அமெரிக்கா)

2020ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஹெப்பாடிட்டிஸ் வைரஸ் குறித்து ஆய்வு செய்த மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Nobel Prize
Nobel Prize
author img

By

Published : Oct 5, 2020, 3:11 PM IST

Updated : Oct 5, 2020, 4:59 PM IST

2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் அறிவிப்பானது மருத்துவத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹார்வி ஜே. ஆல்டர் (அமெரிக்கா), மைக்கெல் ஹாட்டன் (பிரிட்டன்), சார்லஸ் எம்.ரைஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. ஹெப்பாடிட்டிஸ் சி வைரஸ் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக இம்மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஹெப்பாடிட்டிஸ் வைரசை கண்டறியும் வழிமுறை தொடர்பான ஆய்வை இம்மூவரும் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் அவற்றை தடுத்து அழிக்கும் முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என விருது வழங்கும் குழு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, உலகம் முழுவதும் சுமார் 7 கோடி பேர் இந்த ஹெபாடிட்டிஸ் மோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் உயிரிழப்பு இந்நோயல் ஏற்படுகிறது. இந்த நோய் கல்லீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக விளங்குகிறது.

தற்போத உலகப் பெருந்தொற்றான கரோனா பாதிப்பை எதிர்த்து சர்வதேச நாடுகள் போராடிவரும் நிலையில், இந்தாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

2019ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ராட்கிளிஃப், அமெரிக்கவைச் சேர்ந்த வில்லியம் கேலின், கிரேக் சிமென்சா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன. நாளை இயற்பியல் துறைக்கான விருது அறிவிக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடருமா?

Last Updated : Oct 5, 2020, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.