ETV Bharat / international

இருள் விலகத் தொடங்கியுள்ளது - பிரிட்டன் பிரதமர் நம்பிக்கை

லன்டன்: கரோனா பாதிப்பின் உச்சம் குறைந்து அதன் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

UK
UK
author img

By

Published : Apr 27, 2020, 11:57 PM IST

கரோனா பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்ற நாடுகளைக் காட்டிலும் பிரிட்டனில் அதன் தீவிரம் வெகுவாக உள்ளது. குறிப்பாக அந்நாட்டு அதிபர் போரிஸ் ஜான்சனே கரோனாவால் பாதிக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அவர் உடல் நிலை மோசடையவே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உடல்நிலைத் தேறி வந்துள்ளார்.

இந்நிலையில், நோய் தொற்றிலிருந்து முழுமையக மீண்டுவந்துள்ள போரிஸ் ஜான்சன், பிரிட்டன் கரோனா பாதிப்பு நிலவரத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரிட்டனில் கரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ஆம் தேதியிலிருந்து வர்த்தக நடவடிக்கை தேக்கமடைந்துள்ளது எனவும், மே மாதம் 7ஆம் வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.

மாதத்தொடக்கத்திலிருந்த மோசமான சூழலை பிரிட்டன் கடந்துவிட்டதாகக் கூறிய போரிஸ், கரோனா பாதிப்பின் உச்சம் குறைந்து அதன் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இதுவரை ஒரு லட்சத்து 52 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: விடுதலை நாளில் ரோமில் வட்டமடித்த இத்தாலியின் சிறப்பு விமானப்படை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.