ETV Bharat / international

ரோம் பூங்காவில் நியூ என்ட்ரி கொடுத்த 2 சிங்க குட்டிகள்! - ஆசிய சிங்கம்

ரோம் வன உயிரியல் பூங்காவில் புதிதாகப் பிறந்துள்ள இரண்டு சிங்க குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டுள்ளன.

zoo
zoo
author img

By

Published : Jul 12, 2020, 12:07 PM IST

இத்தாலி தலைநகர் ரோமில் அமைந்துள்ள வன உயிரியல் பூங்காவில் புதிதாகப் பிறந்த இரண்டு அரிய வகை சிங்க குட்டிகள், பொதுமக்களின் பார்வைக்காக கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 10) அன்று விடப்பட்டன. இந்த இரண்டு பெண் சிங்க குட்டிகளும் ஆசிய சிங்க இனத்தைச் சேர்ந்தவைகளாகும். மேலும், இவை உலகிலுள்ள மிகவும் ஆபத்தான விலங்கினங்களில் ஒன்றாகும்.

இதுகுறித்து வன உயிரியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ”இந்த இரண்டு சிங்க குட்டிகளும், கடந்த ஏப்ரல் மாதம் பிறந்தன. குட்டிகள் தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளன” என்றார்.

புதிதாக பிறந்துள்ள இரண்டு சிங்க குட்டிகள்

ரோம் வன உயிரியல் பூங்காவின் இயக்குநர் பிரான்செஸ்கோ கூறுகையில், ”இந்த வகை சிங்கங்கள் தற்போது உலகில் 500 மட்டுமே உள்ளன. அவற்றில் பெரும்பாலும் இந்தியப் பகுதிகளில் வாழ்கின்றன. புதிதாகப் பிறந்த இரண்டு சிங்க குட்டிகளுக்கும் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. ஆசிய சிங்கம் அல்லது பாந்தெரா லியோ என்ற அறிவியல் பெயர்கள் அடிப்படையில் இந்த வகை சிங்கங்கள் வகைப்படுத்தப்படும்.

மேலும், அழிந்துவரும் கட்டத்திலுள்ள விலங்குகள் குறித்தான இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature) பட்டியலில் இந்த வகை சிங்கங்களும் சேர்க்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க:பெண்ணின் நடனத்தை மெய்மறந்து ரசித்த ஆண் சிங்கம்! வைரல் காணொலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.