ETV Bharat / international

அருங்காட்சியகத்தில் வீடியோ கேம் - பார்வையாளர்களை கவரும் மாஸ்கோ - அருங்காட்சியகத்தில் வீடியோ கேம்

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பொதுமக்களை கவரும் வகையில், பழமையான ஆர்கேட் விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

பார்வையாளர்களை கவரும் மாஸ்கோ
பார்வையாளர்களை கவரும் மாஸ்கோ
author img

By

Published : Dec 8, 2020, 9:16 PM IST

மாஸ்கோ (ரஷ்யா): ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள அங்காட்சியகத்தில் 40 ஆண்டுகள் பழமையான ஆர்கேட் விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக, அருங்காட்சியகம் என்றால் பார்வையாளர்கள் பொருட்களை தொடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் இங்கிருக்கும் அருங்காட்சியகமோ, முற்றிலும் வேறுபட்டது.

பொதுமக்களை கவரும் வகையில் இந்த அருங்காட்சியகத்தில் சோவியத் யூனியனின் புகழ்பெற்ற ரெட்ரோ ஆர்கேட் விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இங்கு வரும் முதியவர்கள் இந்த விளையாட்டுகளை விளையாடி, தங்களது இளமை காலத்தை நினைவுகூர்ந்தும், இளைய தலைமுறையினர் பழங்கால விளையாட்டுகளை அறிந்து ரசிக்கும் வகையிலும் இந்த அருங்காட்சியகம் உள்ளது.

அருங்காட்சியத்தில் ஆர்கேட் விளையாட்டு

இதுகுறித்து பேசிய அருங்காட்சியகத்தின் இணை நிறுவனர் மக்சிஸம் பினிகின் கூறுகையில், " இங்குள்ள ரெட்ரோ விளையாட்டுகள் மிகவும் புகழ்பெற்றவை. இதனை விளையாடுவதற்காக மக்கள் தினமும் வரிசைக் கட்டி நிற்கின்றனர். நான் எனது சிறுவயதில், இதுபோன்ற ஆர்கேட் விளையாட்டுகளில், நாணயத்தை போட்டு விளையாடியுள்ளேன். நாணயம் தீர்ந்த பிறகு பிறர் விளையாடுவதை கண்டு ரசிப்பேன். குறிப்பாக சோவியத் யூனியனின் முதல் ஆர்கேட் விளையாட்டான கடல் போர் (Sea battle) விளையாட்டு இயந்திரமும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.

அந்த கால மக்களுக்கு இதுதான் மிகவும் பிடித்தமான விளையாட்டு. சோவியத் யூனியனின் விளையாட்டு துறையின் அடையாளமாக இந்த விளையாட்டு உள்ளது. அதுமட்டுமல்லாது, மக்கள் மறந்து போன விளையாட்டுகளும் இங்கு உள்ளன. முதலில் இதுபோன்ற மறைந்த விளையாட்டுகளை கொண்டு அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்ட நாங்கள், மக்கள் பயன்படுத்தாத பூங்காக்கள், சோவியத் யூனியனின் கலாசார வீடுகள், பள்ளிகள், ராணுவத் துறைகளுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த உடைந்த விளையாட்டு இயந்திரங்களை கைப்பற்ற தொடங்கினோம்.

சில நேரங்களில் இதுபோன்ற விளையாட்டுகள் தற்போது பரவலாக விளையாடப்படுவதில்லை என்பதை எண்ணுகையில் மனது கனமாக இருக்கும்" என்றார்.

தற்போது இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆர்கேட் விளையாட்டுகள் 1970களில் பரவலாக புழக்கத்தில் இருந்துள்ளன. 90களுக்கு பின் இந்த விளையாட்டுகளை மக்கள் மறக்க தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து பேசிய அருங்காட்சியகத்தின் நிர்வாகி ஃசூபாரேவா கூறுகையில்," முந்தைய காலத்தில் சோவியத் பொறியாளர்கள் இதுபோன்ற விளையாட்டுகள் மூலம் மக்களின் செயல் திறனை மேம்படுத்த திட்டமிட்டனர். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் கல்வி அறிவை அதிகரிக்க செய்யும் வகையில் இவை இருந்தன. வாகனம் ஓட்டும் திறன், கூர்மையான கவனிப்பு, விழிப்புடன் இருப்பது போன்றவற்றை வளர்க்கவே இதுபோன்ற விளையாட்டுகள் கொண்டுவரப்பட்டன. அதுமட்டுமல்லாது, இதன் மூலம் சாலை விதிகளை மதிப்பது, பின்பற்றுவது போன்ற நல்லெண்ணமும் மக்களிடையே புகுத்தப்பட்டன" என்றார்.

மேலும், தற்போது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள ஆர்கேட் விளையாட்டுகளுக்கு, சோவியத் யூனியனின் விளையாட்டுகள்தான் அடித்தளமாக இருந்துள்ளன. இந்த பழமையமான விளையாட்டுகளை மென்மேலும் மேம்படுத்தியே தற்போது தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுவித விளையாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் ஃசூபாரேவா கூறினார்.

அங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் பேசிய அலெக்சாண்டர் மாக்ரோவ் எனும் நபர், " எனக்கு கூடைப்பந்து, கால்பந்து, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகள் இங்கு மிகவும் பிடித்திருந்தன. எனது பெற்றோர் கால இந்த விளையாட்டுகளை அனுபவித்து மகிழ்ந்தது புதுவித அனுபவமாக இருந்தது " என்றார்.

ரஷ்யாவின் மாஸ்கோ, பீட்டர்ஸ்பெர்க நகரங்களில் இதுபோன்ற ரெட்ரோ ஆர்கேட் விளையாட்டு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: எபிக் கேம்ஸ்: பங்க்ரா பூகி கோப்பை விளையாட்டு வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.