கரோனா தடுப்பூசி பரிசோதனை தொடர்பான முக்கியத் தகவலை உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "உலகம் முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
இவற்றில் பத்து தடுப்பூசிகள் மூன்றவது கட்டத்தில் உள்ளன. இவை இறுதிக்கட்டத்தில் உள்ளதால், பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்ட பின்னர் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.
எனவே, வரும் டிசம்பர் இறுதியிலோ அல்லது 2021ஆம் ஆண்டு தொடக்கத்திலோ தடுப்பூசி பதிவுசெய்யப்படும்" என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இதுவரை உலகம் முழுவதும் சுமார் 3.7 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் பாரத் பயோட்டெக் என்ற நிறுவனம் தடுப்பூசி பரிசோதனையை மேற்கொண்டுவருகிறது.
இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பு மீது மீண்டும் ட்ரம்ப் தாக்கு