ETV Bharat / international

'ஒரு வாரத்துக்குச் சண்டையை நிறுத்திக்கொள்ள தலிபான்கள் ஒப்புதல்' - அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர்

புருசேல்ஸ்: ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்துக்குச் சண்டையை நிறுத்திக்கொள்ள தலிபான்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் கூறியுள்ளார்.

author img

By

Published : Feb 15, 2020, 1:52 PM IST

Mark Esper, மார்க் எஸ்பர்
Mark Esper

18 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து தலிபான் பயங்கரவாத அமைப்பும் அமெரிக்க அரசும் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக அமைதி ஒப்பந்தமிட தலிபான் ஒப்புக்கொண்டது. அமெரிக்கவும் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவிருந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்தார்.

இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் டேங்க்ஸ் கிவ்விங் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தானுக்குத் திடீர் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தலிபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என அறிவித்தார். அதன்படி கர்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கா - தலிபான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கிய நடந்துவருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி கடந்த 11ஆம் தேதி ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்திருந்த நிலையில், ஒரு வாரத்துக்குச் சண்டையை நிறுத்திக்கொள்ள தலிபான்- அமெரிக்கா ஒப்புந்தம் எட்டியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெல்ஜியம் தலைநகர் புருசேல்ஸில் நடந்த நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய அவர், "ஒரு வாரத்துக்குச் சண்டையை நிறுத்திக்கொள்ள தலிபானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன. இதனை முன்னெடுத்துச் செல்ல இருதரப்பு கூட்டுச் சந்திப்புகள் நடைபெற்றன. மேலும், இதுகுறித்து நட்பு நாடுகளுடன் அமெரிக்க ஆலோசனை நடத்திவருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : 'இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது' - ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.