உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. குறிப்பாக, உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக ஆயுத உதவிகளையும் பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளன.
தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா தீவிரமாக செயல்பட்டுவரும் நிலையில், உக்ரைன் படையினர் ரஷ்யாவுக்கு எதிராக சிறப்பான எதிர்வினையாற்றிவருகின்றனர். இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவு நாடான பெலாரஸ் விரைவில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுடன் கைகோர்க்கும் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. இரு நாடுகள் இடையே பேச்சு வார்த்தை அண்டை நாடான பெலாரஸ்சில் நடைபெறவுள்ளது.
இந்த சூழலில், பெலாரஸ் நாட்டின் அதிபர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் புதினின் ஆதரவில்தான் அந்நாட்டில் ஆட்சி நடத்திவருகிறார் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், உக்ரைனில் போரிடும் ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: போர் வீரர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு - அதிரடி அறிவிப்பு