சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ், 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மிக வேகமாகப் பரவிவரும் கோவிட்-19 வைரஸ் ஒரு பெருந்தொற்று நோய் என உலக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் தெத்ரோல் ஆதனோம் அறிவித்தார்.
இந்நிலையில், நாளை நடைபெறவிருந்த மனித உரிமைகள் ஆணையத்தின் 43ஆவது அமர்வு கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...கொரோனா: ஸ்ரீநகர் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் விடுமுறை