ETV Bharat / international

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரிட்டன் - ஒரு பார்வை! - கரோனா வைரஸ்

ஊரடங்கை தளர்த்தி பல்வேறு தடைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளது பிரிட்டன் அரசு. அதுபற்றி விளக்குகிறது இத்தொகுப்பு...

UK UNLOCKED
UK UNLOCKED
author img

By

Published : May 19, 2020, 4:57 PM IST

ஊரடங்கை தளர்த்தி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது பிரிட்டன் அரசு. மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், குறிப்பாக கூட்டம் நிறைந்த பகுதிகளில். வீட்டிலிருந்து பணிபுரியாதவர்கள், அலுவலகத்துக்கு செல்லலாம். தயாரிப்பு, போக்குவரத்து, விநியோகம், ஆய்வு ஆகிய துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள், இனி வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டிய அவசியமில்லை.

அலுவலங்களில் தரை, லிஃப்ட் பட்டன்கள், சமையல் செய்யும் இடம், குளியறை உள்ளிட்டவைகள் தொடர்ந்து சுத்தம் செய்யப்படுவதை அலுவலக நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். உலகமே கரோனா வைரசின் இரண்டாம் அலையை சந்திக்கக் காத்திருக்கும் வேளையில், பிரிட்டன் அரசு அனைத்து பள்ளிகளையும் திறக்க முடிவு செய்துள்ளது. பொருளாதார முன்னேற்றத்தை மனதில் கொண்டு, பணியில் உள்ள பெற்றோர்களின் குழந்தைகளை மட்டும் தற்போது பள்ளி செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு நிலையங்களுக்கு சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் வகுப்புகளுக்கு தயாராகும்படி பள்ளி நிர்வாகங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பயணம் செய்வதற்கு அரசு வாகனங்களை மட்டும் நம்பியிருக்காமல், முடிந்த அளவு தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்தும்படி அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்களில் கூட்டம் அதிகமாவதைக் கட்டுப்படுத்த, பணி நேரங்களை மாற்றியமைக்க அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகுந்த இடைவெளியை பின்பற்றும் வரை குடிமக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் பயணிக்கலாம். ஆனால் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கு அனுமதி கிடையாது.

குழந்தைகள், முதியவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை பெற்று வருபவர்கள் மீது பிரிட்டன் அரசாங்கம் சிறப்பு கவனம் கொண்டுள்ளது. முதியோர் இல்லங்களில் தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தங்கள் நாடாளுமன்றத்தை பணியிட மேலாண்மைக்கு முன்மாதிரியாக திகழச் செய்வதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடரை குறைத்துக் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவுள்ளது. சமீபத்தில் நடந்த கூட்டத்தொடரில், தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே கலந்துகொண்டனர். மற்ற அனைவரும் வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் பங்கேற்றனர்.

ஜூலை 4ஆம் தேதிக்கு பிறகு ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் துறைகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்களிக்க திட்டமிட்டுள்ளது. கரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கை, மூன்று கட்டங்களாகப் பிரித்து தளர்வு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் பிரிட்டன் அரசாங்கத்தின் கடைசி கட்ட நடவடிக்கை ஜூலை 4ஆம் தேதி தொடங்கும். ஆனால், அதற்கு மற்றவை நினைத்தபடி நிறைவேற வேண்டும்.

ஊரடங்கை தளர்த்தும் நடவடிக்கைகள், ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கு கிடையாது. கரோனாவுக்கான விதிமுறைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சரிவர பின்பற்றும்படி பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த புதன் கிழமை, 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் லண்டன் டியூப் ரயிலில் பயணித்தனர். அதில் பலர் முகக்கவசம் இல்லாமல் பயணித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.