ETV Bharat / international

ஜி7 தலைவர்களுடன் மெய்நிகர் சந்திப்பை நடத்தும் போரிஸ் ஜான்சன்!

லண்டன்: கோவிட் தடுப்பூசி அனைத்து நாடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பாக விவாதிக்க, ஜி7 உச்சி மாநாடு தலைவர்களுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மெய்நிகர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

author img

By

Published : Feb 14, 2021, 7:27 PM IST

போரிஸ் ஜான்ஸ்சன்
போரிஸ் ஜான்ஸ்சன்

கோவிட் -19 தடுப்பூசிகளை அனைத்து நாடுகளுக்கு சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்கும், எதிர்காலத்தில் நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்க ஜி7 தலைவர்களுடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மெய்நிகர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஜி7 தலைவர்களுடன் வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) மெய்நிகர் சந்திப்பு நடைபெறவுள்ளது. அந்தச் சந்திப்பில், தடுப்பூசிகள் அனைத்து நாடுகளுக்கும் சமமாகக் கிடைப்பது தொடர்பாகவும், கரோனா தொற்றிலிருந்து மீண்டு வரும் போராட்டம் தொடர்பாகவும், நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்து எனது நண்பர்களுடன் கலந்துரையாட உள்ளேன். பொதுவான எதிரியை வென்றெடுப்பதற்காக, இதுவரை இல்லாத வகையில், 2021இல் அனைவரும் ஒன்று திரண்டுள்ளோம் " எனத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் அதிபர்களும் பங்கேற்கவுள்ளனர். அதிபராக பைடன் பதவியேற்ற பிறகு, கலந்துகொள்ளும் பெரிய நிகழ்வும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.