ETV Bharat / international

ஆடம்பர விவாகரத்து; ஆறாவது மனைவிக்கு ரூ. 5,525 கோடி ஜீவனாம்சம் - ஜீவனாம்சம் என்றால் என்ன

துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம் விவாகரத்து வழக்கில், அவரது ஆறாவது மனைவிக்கு ரூ. 5,525 கோடி ஜீவனாம்சம் வழங்குமாறு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹயா பின்ட் அல் ஹூசன்
ஹயா பின்ட் அல் ஹூசன்
author img

By

Published : Dec 22, 2021, 5:05 PM IST

Updated : Dec 22, 2021, 9:10 PM IST

லண்டன்: துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம், ஜோர்டன் மன்னர் அப்துல்லாவின் உறவினரான ஹயா பின்ட் அல் ஹூசைனை ஆறாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 13 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், ஹயா பின்ட் அல் கருத்து வேறுபாடு காரணமாக துபாயில் இருந்து வெளியேறி, லண்டனில் தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இதனிடையே, ஹயா பின்ட், லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தாக்.

அதில், துபாய் அரசர் ஷேக் முகம்மது உடன் எனக்கு கட்டாய திருமணம் செய்யப்பட்டது. சுதந்திரம் வழங்கப்படவில்லை. இப்போது பிரிந்து வாழ்கிறோம். அவரால் எனது குழந்தைகள் கடத்தப்பட வாய்ப்புள்ளது. எனக்கு விவாகரத்தும், குழந்தைகளுக்கு பாதுகாப்பும் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

550 மில்லியன் யூரோ ஜீவனாம்சம்

இந்த வழக்கின்போது, துபாய் அரசர் ஷேக் முகம்மது, ஹயா பின்ட் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் 550 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 5,525 கோடி) ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து நீதிமன்றம், ஹயாவின் அரச மாளிகையை பராமரிக்கவும், குழந்தைகளின் கல்விக்காகவும், பாதுகாப்புக்காகவும், எதிர்காலத்திற்காகவும் இந்த ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

72 வயதான ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம், 47 வயதான ஹயா பின்ட்டும் கருத்து வேறுபாடு காரணமாக 2019ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.200 கோடி ஜீவனாம்சம்: பெயரை மாற்றிக்கொண்ட சமந்தா

Last Updated : Dec 22, 2021, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.