ETV Bharat / international

'ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகள் கிடங்காக துருக்கி இருக்காது' - அகதிகள்

தாலிபான்கள் ஆட்சியில் இருந்து தப்பித்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புக ஆப்கானியர்கள் விரும்பும் சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் தங்களுடைய நாடுகளில் ஆப்கன் அகதிகளை ஏற்க மறுக்கும் சமிக்ஞைகளை காட்டிவருகிறது.

Turkey won't become Europe's 'refugee warhouse', warns Erdogan as Afghans flee Taliban
எல்லைகளை மூடும் ஐரோப்பிய ஒன்றியம்- ஆப்கன் அகதிகளை ஏற்க மறுக்கும் சமிக்கையா?
author img

By

Published : Aug 20, 2021, 6:23 PM IST

அங்காரா: தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து பலரும் வெளிநாடுகளுக்கு செல்ல காபூல் விமான நிலையத்தில் குவிந்துவருகின்றனர். பலர் ஈரான், துருக்கி வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்துவருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், ஆப்கனியர்களுக்கு புகலிடம் அளிக்கும் பொறுப்பை ஐரோப்பிய நாடுகள் ஏற்கவேண்டும் என துருக்கி பிரதமர் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், ஐரோப்பாவிற்கு புகலிடம் கோரிவரும் அகதிகளின் கிடங்காக துருக்கி நாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Turkey won't become Europe's 'refugee warhouse', warns Erdogan as Afghans flee Taliban
ஆப்கன் அகதிகள்

"லட்சக்கணக்கான ஆப்கனிய மக்கள் ஐரோப்பியா ஒன்றியம் செல்ல முயற்சிக்கும் வேளையில், தங்களுடைய நாட்டு மக்களின் நலனுக்காக எல்லைகளை மூடி ஐரோப்பிய யூனியன் தப்பிக்க முடியாது. அவ்வறு செய்வது, ஐரோப்பிய ஒன்றியம் தனது மனித உரிமை விழுமியங்களில் இருந்து பின்வாங்குவதைக் குறிக்கும்" எனவும் எர்டோகன் கூறியுள்ளார்.

3.6 மில்லியன் சிரியா மக்கள், 3 லட்சம் ஆப்கானியர்கள் என மொத்தம் 3.7 மில்லியன் மக்கள் துருக்கியில் அகதிகளாக உள்ளனர். உலகிலேயே அதிக அகதிகள் உள்ள நாடாக துருக்கி உள்ளது.

மீண்டும் 2015 சூழ்நிலை

சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்தபோது, ஐரோப்பிய யூனியனில் தஞ்சம் கேட்டு ஏராளமான சிரிய மக்கள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு, தங்குமிடம், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க 2015ஆம் ஆண்டு துருக்கியுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு 7.03 பில்லியன் டாலர்களையும் துருக்கி அரசாங்கத்திற்கு வழங்கியது.

இந்த ஒப்பந்ததிற்குப் பின்பு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் புகலிடும் கோருவோர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

2015ஆம் ஆண்டு பல சிரிய மக்கள் ஐரோப்பிய யூனியனில் தஞ்சமடைய ஆபத்தான கடலைக் கடந்துவந்தனர். தற்போது, மீண்டும் அதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டுவிடும் என ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் அஞ்சுகின்றன. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தில், அகதிகள் பிரச்னை அரசியல் தளத்தில் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன.

2015ஆம் ஆண்டு ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் சிரிய அகதிகளுக்காக எல்லைகளை திறந்துவிட்டார். இதற்கு, அந்நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் கடுமையான கண்டனத்தை தெரிவித்தன.

ஏஞ்சலா மெர்கல்

ஆப்கானிய மக்களின் இடப்பெயர்வு

ஜனவரி முதல் கிட்டத்தட்ட 3,00,000 மக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் 3.5 மில்லியன் ஆப்கானியர்கள் உள்ளார்கள் என்றும் ஐநா மன்றத்தின் அகதிகள் நிறுவனம் கூறுகிறது.

இவர்களில், பெரும்பாலோனர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சமடையவே விரும்புகின்றனர். இதனைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதோடு, புதிதாக அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராக தாங்கள் இல்லை என்பதையும் பூடகமாக சொல்லிவருகின்றன.

ஐரோப்பிய யூனியனின் சமிக்கை

முன்னதாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் இடப்பெயர்வு அதிகரிப்பதை கட்டுப்படுத்த ஐரோப்பிய யூனியன் ஒரு வலுவான முடிவை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் அங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி நகரும் அபாயத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

அகதிகள் அதிகம் உள்ள நாடுகள்

"ஒழுங்கற்ற முறையில் மக்கள் இடம்பெயர்வதை, சிலர் பயன்படுத்தி, கடத்தல் உள்ளிட்டவைகள் செய்ய வாய்ப்புள்ளது. நாம் அதிலிருந்து நம் நாட்டை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஆபத்தில் உள்ள மக்களை விரைவாக மீட்கவும், அவசர வெளியேற்றத்திற்கான விசாவை வழங்கி மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தவும், சர்வதேச அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன.

கிரீஸ் நாட்டின் குடியேற்ற அமைச்சர், ஆப்கனில் இருந்து அகதிகளாக வரும் மக்களின் நுழைவு வாயிலாக கிரீஸ் இருக்காது எனக் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் கோரி 2018க்குப் பிறகு விண்ணப்பிப்பவர்களின், சிரிய மக்களுக்கு அடுத்தபடியாக ஆப்கானியர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உணவு பாதுகாப்பின்றி தவிக்கும் ஒரு கோடி ஆப்கானிஸ்தான் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.