லண்டனில் உள்ள பிரபலமான உணவங்களில் ஒன்று ‘தி பாட்டனிஸ்ட்’. இந்த உணவகம் வறுத்த உருளைக் கிழங்கு, கறிகளை உண்பதற்கு 500 யூரோ (இந்திய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய்) சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை எதிர்பார்த்து அந்த உணவக நிறுவனம் காத்திருக்கிறது. தேர்வு செய்யப்படும் நபர், வறுத்த உருளைக் கிழங்கு, சிக்கன், ஆடு, மாடு மற்றும் பன்றிக் கறி ஆகியவற்றை சுவைத்து ருசியைப் பற்றி கூற வேண்டும். அவரது கருத்துக்கு பின்பே உணவு பரிமாறப்படும். மக்களுக்கு சுவையான வறுத்த உருளைக் கிழங்குகளை வழங்குவதே தங்கள் உணவகத்தின் நோக்கம் என அதன் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
இந்த உணவகத்தில் பல்வேறு வறுத்த உணவுகள் உள்ளன. எனினும் உருளைக் கிழங்குதான் அவர்களுக்கு ஸ்பெசலாம். இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி நேர்காணல் நடைபெறும். இதில் வறுத்த உணவுகளின் சுவை குறித்து 500 வார்த்தகைகளில் கட்டுரை எழுத வேண்டும்; உருளைக் கிழங்கின் சுவை குறித்து 60 நொடிகள் பேசி அதை வீடியோ பதிவு செய்து கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 7,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்: டிஎன்ஏவில் புதிய மனித மரபணு