ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு எம்பிக்களின் ஆதரவை பெற முடியவில்லை. இதனால் தான் பதவி விலகுவதாக பிரதமர் தெரசா மே கடந்த மாதம் அறிவித்தார்.
இதனையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது. இதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெராமி ஹண்டேயுக்கும் இடையே போட்டி நிலவியது. வாக்கு முடிவில் பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்திடம் தேரசா மே இன்று ராஜினாமா கடிதத்தை அளித்தார்.