ETV Bharat / international

புவியின் மீது கொண்ட காதல் - பள்ளிப் படிப்பைத் துறந்த 16 வயது சிறுமி! - கிரெட்டா துன்பெர்க் விளைவு

இப்பிரபஞ்சம் சந்தித்துவரும் மிக முக்கிய சிக்கலான பருவநிலை மாற்றம் குறித்து 16 வயது சிறுமி ஒருவர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு 'கிரெட்டா துன்பெர்க் விளைவு' ஒன்றை உருவாக்கி உலகையை தன்பக்கம் திரும்பப் பார்க்கவைத்துள்ளார்.

Swedish activist Greta Thunberg
author img

By

Published : Sep 17, 2019, 7:00 AM IST

Updated : Sep 23, 2019, 11:01 AM IST

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி கிரெட்டா தன்பெர்க். தன் வயதையொத்த பெண்கள் டேட்டிங், கேளிக்கை என கழிக்க, இவரோ பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பெரும் பேரணிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்.

Swedish activist Greta Thunberg
கிரெட்டா தன்பெர்க்

மாணவி டூ போராளி

சில ஆண்டுகளுக்கு முன் ஜெனிஃபர் மோராஷ், அவரது ஒன்பது வயது சிறுமியைப் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணிக்கு அழைத்துச் சென்றிருந்தார். நம்மால் பூமி படும்பாட்டையும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் அபாயம் குறித்த செய்திகளும் அந்த ஒன்பது வயது சிறுமியை பல நாட்கள் உறங்கவிடாமல் தடுத்தது.

Swedish activist Greta Thunberg
கிரெட்டா தன்பெர்க்

காலங்கள் ஓடின, தனது கண்முன்னே பல இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதைக் கண்டு வேதனை கொண்டார் அவர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தார். தனது 16 வயதில் பள்ளிப் படிப்பைத் தூக்கி எறிந்தவர், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனப் போராடத் தொடங்கினார்.

Swedish activist Greta Thunberg
ஒற்றை ஆளாகப் களத்தில் நிற்கும் கிரெட்டா தன்பெர்க்

மாணவி நிகழ்த்திய புரட்சி போராட்டம்!

2018ஆம் ஆண்டு ஒற்றை ஆளாகச் சுவீடன் நாடாளுமன்றம் முன் 'School strike for climate' என்ற பதாகையுடன் ஒற்றை ஆளாகத் தனது போராட்டத்தைத் தொடங்கிய அவரது பின்னால், இப்போது ஃபிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த இளம் தலைமுறை மாணவ மாணவியர் போராடக் காத்திருக்கின்றனர்.

Swedish activist Greta Thunberg
கிரெட்டா தன்பெர்க்

உலகில் தற்போதைய வெப்பநிலையை 1.5°C வரை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வகுப்புகளைப் புறக்கணித்து Friday For Future என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திவருகிறார் இந்தக் குட்டிப்போராளி கிரெட்டா தன்பெர்க்.

Swedish activist Greta Thunberg
கிரெட்டா தன்பெர்க்

மனிதகுலத்துக்கு அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தும் தோல்வி

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி, "2030ஆம் ஆண்டுகள் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியாகும் கார்பனை பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதைப் போல குறைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அது மனித குல வரலாற்றுக்கு அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தும் மாபெரும் தோல்வியாக இருக்கும்" என்று அவர் ஐரோப்பியப் பொருளாதார - சமூக குழுவில் முழங்கிய முழக்கம் ஐரோப்பிய முழுக்க எதிரொலித்தது.

Swedish activist Greta Thunberg
கிரெட்டா தன்பெர்க்

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில் அவர், "நீங்கள் எங்கள் எதிர்காலத்தைச் சுரண்டி விட்டீர்கள், இந்த பூமி வீடு தீப்பிடித்து இருப்பதை நீங்கள் யாரும் உணரவில்லை, இதைப் பற்றிப் பேச யாரும் முன்வரவில்லை. நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்க வரவில்லை, நீங்கள் இதைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும் இனி நாங்கள் விடுவதாக இல்லை" என அழகான பிஞ்சு குரலால் எச்சரித்தது, அனைத்து தலைவர்களின் நெஞ்சையும் உறுத்தியிருக்கும்.

Swedish activist Greta Thunberg
கிரெட்டா தன்பெர்க்

கிரெட்டா தன்பெர்க் விளைவு

உல்லாசமாக இருந்துவரும் பல லட்சம் மாணவ மாணவியருக்குப் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் வாழவிருக்கும் பூமிக்காகப் போராடவைத்தவர் கிரெட்டா தன்பெர்க்.

இங்கிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் செயலர் மைக்கேல் கோவ், "நான் உங்கள் பேச்சைக் கேட்டபோது, ​என்னுடைய பொறுப்பை உணர்ந்தேன். உங்கள் பெற்றோரின் தலைமுறையைச் சேர்ந்த என்னை குற்ற உணர்ச்சியடைய வைத்துவிட்டீர்கள். காலநிலை மாற்றம் குறித்து போதுமான அளவு நான் பேசவில்லை என்பதை உணர்கிறேன்" என்றார்.

இவரது போராட்டங்களுக்குப் பின், 2019ஆம் ஆண்டில் காலநிலை குறித்து குழந்தை பத்திரிகைகளில் வரும் செய்தி இரட்டிப்பாக்கியுள்ளது. மேலும் அவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

Swedish activist Greta Thunberg
கிரெட்டா தன்பெர்க்

விமான பயணங்கள் மூலம் வெளியாகும் கார்பன் குறித்து இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வுகளின் விளைவால் சுமார் பத்து விழுக்காடுவரை ரயில் போக்குவரத்து உயர்ந்துள்ளது. இதை வல்லுநர்கள் பலரும் அவரது பெயரைக்கொண்டு 'கிரெட்டா தன்பெர்க் விளைவு' என்றே அழைக்கின்றனர்.

Swedish activist Greta Thunberg
கிரெட்டா தன்பெர்க்

பூமியைக் காக்க சூப்பர்மேன்களும் ஸ்பைடர்மேன்களும் தேவையில்லை. தான் வாழும் பூமியின் மீது ஒவ்வொரு மனிதனும் காதல் கொண்டாலே போதும் என்று உலகத்திற்கு பறைசாற்றியிருக்கிறார் இந்த இளம் போராளி கிரெட்டா தன்பெர்க். இந்தப் பூவுலகை காக்க கிரெட்டா தன்பெர்க்குடன் கைகோர்த்து ஒன்றாகப் போராட நாமும் தயாராவோம்!

Intro:Body:

https://www.aljazeera.com/ajimpact/swedish-activist-greta-thunberg-takes-climate-protest-trump-190913173915079.html

#யார் இந்த கிரேட்டா தன்பெர்க் ❓

#எப்படி இவர் பின் ஒரு பெரிய கூட்டமே வந்தது❓

💢உலக தலைவர்கள் இவரை கண்டு அஞ்சுவது ஏன்❓

💢 இவரது கோரிக்கை என்ன ❓

💢 கார் விற்பனை/ பொருளாத சரிவுக்கு இவர்தான் காரணமா ❓

💢 பூமியை காப்பாற்ற பிறந்தவரா இவர்❓

💢 நம் பிள்ளைகளின் எதிர்கால ஒளிவிளக்கா இவர் ❓

  இப்படி பல விசயங்கள் ஒரு ஒரு மணிக்கும் உலக நாடுகள் பேசிகொண்டிருக்க, நமது ஊடகம் சொல்ல மறந்ததை இதில் உங்களுக்காக தமிழில் எளிய விளக்கத்துடன்..

16 வயதே நிரம்பிய #GretaTHUNBERG ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர்.. 

       வசதியான நாட்டில் பிறந்த இவர் 8 வயது இருக்கும் போது இவரது ஆசிரியர் "உலக வெப்பமயமாதலால் பூமியில் பல்லுயிர்கள் அழிவில் உள்ளது, இதனால் பல லட்சகணக்கான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர், 

    இதற்கெல்லாம் காரணம் மனிதன், அவன் வாழ்க்கை முறையை மாற்றிய எரிபொருள்கள்" என்ற செய்தி அவருக்குள்  பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது, அதை பற்றி பல தேடி படித்தார், உறங்க முடியாமல் தவித்தார், பள்ளிக்கு சரியாக செல்லாமல் மனம் வேதனைபட்டார்..

காலம் ஓடின, பல இயற்கை அழிவுகளையும், தவறான அரசியல் கொள்கையும், இயற்கை சுரண்டல்களையும் கண் முன்னே செய்திகளில் கண்டார், சரியாக 16 வயது நிரம்பியது.. 

தன் அபயகர எதிர்காலத்தை எண்ணி பெற்றோரிடம் பேசி ஒரு முடிவெடுத்தார்,  அதுதான், "தன் பூமியை வியாபாரம் செய்யும் இந்த கல்வி வேலை வாய்ப்பு வேண்டாம்", இனி அரசை கேள்வி எழுப்பி இந்த பேராபத்தை தடுக்க கோரி போராட போகிறேன் என்றார், பெற்றோர் சம்பந்தத்தை மீறி களம் இறங்கினார்!! 

 ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்றத்தின் வாயில் அமர்ந்து School strike for climate என்ற பதாகையை பிடிந்திருந்தார்.. பல பள்ளி மாணவர்களும் இவருடன் இணைய தொடங்கினர், மீடியாக்கள் பிள்ளைகள் போராட்டத்தை சூழ்ந்தன, பெரிய அளவில் கூட்டம் திரள அண்டை நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து என சோசியல் மீடியாக்கள் மூலம் அதிகம் பேசபட்டன..

இவர்கள் ஒற்றுமை பெரிதாகின, இனி ஒவ்வொரு வாரம் வெள்ளி கிழமைகளில் மாணவர்கள் வகுப்பறையை புறக்கணித்து FFF (Friday For Future) என பிரச்சாரம் மேற்கொண்டு உலக வெப்பமயமாதலை தடுக்க கோரி, பாரிஸ் ஒப்பந்தமான புவி வெப்பத்தை 1.5°C குறைக்க நடவடிக்க எடுக்க கோரிக்கைகள் முன் வைக்கபட்டன!! கால நிலை அவசரம் அறிவிக்கவும் கூகுரல் இட்டனர்.. 

 அனைத்து நாட்டு அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று,   'இனி பெட்ரோல் டீசல் எடுக்க கூடாது, காடுகளை அழிக்க கூடாது' போன்ற அதிரடி அரசியல்  கொள்கைகளை கொண்டதால், புதிய பொருளாதார கொள்கைகளை உடனடியாக மாற்றி அமைப்பதில் உலக தலைவர்களுக்கு பெரும் சிக்கல் நெருக்கடி கொடுத்தது,..

இது உலக முழுக்க பிரபலமாக கடந்த மார்ச் 15 2019 ல் 60 நாடுகள் ஒரே நேரத்தில் மாணவர்கள் "தங்கள் எதிர்காலத்தை சுரண்டாதீர்கள்" என போராட்டம் வெடித்தன,  

#EXTINCTION_REBELLION என்ற இளைஞர்களும் இவர்களுடன் இணைந்து பெரும் கட்டுங்கடங்காத கூட்டத்தை ஏற்பட, உலக தலைவர்கள் நெருக்கடிக்குள்ளாக..

      கிரேட்டா தன்பெர்க் குழந்தையை  ஐரோப்பிய மாநாட்டில் உலக தலைவர்கள் மத்தியில் பேச அழைத்தனர்,. தெளிவாக உண்மை நிலவரத்தை உணர்த்தி, பல்லுயிர்கள் அழிவதை விவரித்து மனம் கலங்கிய அவர்   நறுக்கென நான்கு நிமிடம் உலக தலைவர்களுக்கு புரிய வைத்த அந்த ஒவ்வொரு வரிகளும் தத்துங்களாகின

 " நீங்கள் எங்கள் எதிர்காலத்தை சுரண்டி விட்டீர்கள், இந்த பூமி வீடு தீ பிடித்து இருப்பதை நீங்கள் யாரும் உணரவில்லை, இதை பற்றி பேச யாரும் முன்வரவில்லை, நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்கவரவில்லை, நீங்கள் இதை கருத்தில் கொள்ளாவிட்டாலும் இனி நாங்கள் விடுவதாக இல்லை" என அழகான பிஞ்சு குரலால் எச்சரித்து சென்றார்..

இதன்பின் போராட்டங்கள் தொடர்ந்தன, தலைநகர் டெல்லியிலும் நடந்தன,  மக்கள் மனதை மாற்ற கூடிய ஹாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார், 

        வரும் 20 Sept முதல் 27 வரை உலக முழுக்க மீண்டும் போராட Extinction rebellion மற்றும் Greta thunberg முக பக்கங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கபட்டுள்ளன..

மும்பை பேங்களூர் என இந்திய நகரங்கள் தயாராகி கொண்டிருக்க, தமிழகத்தில் நடக்கும் குழப்ப அரசியல், மக்களுக்கு உண்மையான இ்ந்த காலநிலை நெருக்கடியையும் உலக நடப்பையும் மறைக்குமளவிற்கு பல பொழுதுபோக்குகளுடன் பிசியாக உள்ளன..

Extinction rebellion Chennai என்ற பெயரில் பக்கம் தொடங்கபட்டுள்ளது, இனி உலக எதிர்கால மாணவர்களுடன் கைகோர்க்க நம் பிள்ளைகளை தயார் செய்ய வேண்டி பொறுப்பு வாழ்ந்து கெட்ட நம் ஒவ்வொருவருக்கும் உண்டு..

பூமியை காத்த பழங்குடிகள் போராட தெம்பில்லாமல், இன்று அழிவின் விழிம்பில் இருக்க, அடுத்த நாகரீக தலைமுறைகள் மரபில் பூமிய காப்பாற்றும் ஹீரோக்கள் Greta THUNBERG குழந்தை மூலமாக உலக முழுக்க நம்  வாழ்க்கை முறையையும் பொருளாதாரத்தையும் மாற்றியமைக்க போவதில் இனி எந்த சந்தேகமும் இல்லை..

Let join our hands for future generation🙌

https://www.facebook.com/groups/496646537560071/

Greta thunberg கடந்து வந்த பாதை பட வடிவில்👇

https://youtu.be/oCVQdr9QFwY

இதை பற்றி மக்களை/ ஊடகத்தை/ அரசியல் வியாதிகளை பேச வைப்போம்.. நம் பிள்ளைகளுக்காக💪

❤💚L E T S - S T A R T - S A V I N G - 

E A R T H💚❤

Conclusion:
Last Updated : Sep 23, 2019, 11:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.