ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜூவான் ஜோஸ் என்ற இளைஞர் ஒருவர் வாங்கிய உணவுப் பொருளில் உயிரிழந்த எலி இருந்துள்ளது.
ஆனால், அதை கவனிக்காத அந்த இளைஞர் அதை சாப்பிட்ட பின்னரே, ஏதோ சாப்பிடக்கூடாத ஒன்றை சாப்பிட்டுவிட்டதாக வித்தியாசமாக உணர்ந்து இருக்கிறார்.
இதையடுத்து, உடனே அவர் தான் சாப்பிட்ட உணவுப்பொருளை சோதிக்கும்போது, அதில் இரண்டு கண்கள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல இருந்தது.
பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் அதைக் காட்டியபோது அவருடைய தட்டில் இருந்தது உயிரிழந்த எலி என்பது அவருக்குத் தெரியவந்தது.
இதற்குக்காரணம், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ஜூவான் ஜோஸ் காய்கறிகளை வாங்கி வந்தபோது, அந்த காய்கறிகளுடன் இருந்த எலியை அவர் கவனிக்கவில்லை.
தற்போது இது தொடர்பாக குறிப்பிட்ட அந்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினர் மீது ஜூவான் ஜோஸ் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
இதையும் படிங்க : நரேந்திர மோடி திமிர் பிடித்தவர்- ஆளுநர் சத்ய பால் மாலிக்