ETV Bharat / international

நீரில் 'வயகரா'! - அத்துமீறும் ஆடுகளால் அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!

author img

By

Published : Dec 11, 2019, 10:38 PM IST

டப்ளின்: செம்மறி ஆடுகள் குடித்த தண்ணீரில் தவறுதலாக வயகரா கலந்துவிட்டதால் உரிமையாளர் படாதபாடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

viagra
வயகரா

தெற்கு அயர்லாந்தில் சிலர் செம்மறி ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்துவந்துள்ளனர். அவர்களின் ஆடுகள் திடீரென்று தொடர்ச்சியாகப் இனப்பெருக்க செயலில் ஈடுபடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சந்தேகம் அடைந்த செம்மறி ஆட்டின் உரிமையாளர்கள், ஆடுகள் குடித்த தண்ணீரை பரிசோதனை செய்ததில், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

என்னவென்றால், ஆடுகள் குடித்த நீரில் வயகரா கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை செய்ததில், ஃபைசர் என்ற மருந்து உற்பத்தி ஆலையிலிருந்து 755 டன்னுக்கும் அதிகமான வடிகட்டப்படாத வயகரா கழிவுகளை ரிங்காஸ்கிடி துறைமுகத்தின் நீரில் கடந்த வாரம் கொட்டியதை ஒப்புக் கொண்டுள்ளது.

தற்போது, வயகரா கலந்த தண்ணீரைக் குடித்த காரணத்தினால், 80 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் பாதிப்பு அடைந்துள்ளன. இந்த ஆடுகள் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு குறைந்தபட்சம் சில வாரங்கள் ஆகும் எனத் தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மக்கள் புரிந்துகொண்டால் மாற்றம் நிச்சயம் - கிரேட்டா தன்பெர்க்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.