ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
தொடர்ந்து, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார்.
நவல்னி சிகிச்சை பெற்று வரும் பெர்லினில் உள்ள சாரைட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நோவிச்சோக் வகையைச் சேர்ந்த ஒரு ரசாயன விஷம் நவல்னிக் விற்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தெளிவான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன" என்று தெரிவித்தது.
தற்போது கோமாவிலிருந்து மீண்டுள்ள நவல்னி, தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதன் பின்னணியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் வேறு நபர்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தீவிர எதிர்ப்பாளரான நவல்னி, அந்நாட்டு அரசு நிர்வாகங்களில் உள்ள ஊழல் தொடர்பாக தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல் விவாதத்தில் எனக்குத்தான் வெற்றி - அடித்து கூறும் ட்ரம்ப்