ரஷ்யாவின் இஷ்லுசின்ஸ்க் என்ற பகுதியில் உள்ள அடுக்கமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து, 29 வயது பெண் ஒருவர் தவறுதலாகக் கீழே விழுந்தார். அந்தப் பகுதியில் உள்ள சாலைகளில் பனி படர்ந்திருந்ததால், அந்தப் பெண் எந்தவித காயமுமின்றி நல் வாய்ப்பாக உயிர் தப்பினார்.
அதன்பின் எதுவும் நடக்காதது போல் அவர் எழுந்து நடந்து சென்றது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருந்துபோதும் தகவலறிந்து சம்பவ இடம் சென்ற அந்நகர காவல் துறையினர், அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அதில், அவருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிய வந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பெண் கீழே விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்காவுக்குச் சொந்தமானது - தலிபான்