உலகெங்கிலும் பல ஆராய்ச்சியாளர்கள் கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் தொற்றின் தன்மை, அதன் செயல்பாடு குறித்த தகவல் வெளியாகிவருகிறது.
அந்த வகையில், ரஷ்யாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கரோனா தொற்றின் பலவீனத்தை ஆய்வு செய்து புதிதாக ஒரு விஷயத்தைக் கண்டறிந்துள்ளனர். அது என்ன தெரியுமா? சாதாரண ரூம் டெம்பரேச்சர் தண்ணீரிலேயே கரோனாவின் தாக்கம் குறைந்துவிடுமாம். இந்த ஆய்வை ரஷ்யாவின் வைராலஜி, பயோடெக்னாலஜிக்கான வெக்டர் ஸ்டேட் ஆராய்ச்சி மைய (VECTOR State Research Center of Virology and Biotechnology) ஆராய்ச்சிக் குழு நிகழ்த்தியிருக்கிறது.
கரோனா வைரஸின் வளர்ச்சியை சாதாரண தண்ணீர் தடுத்துவிடுகிறது. சுமார் 24 மணி நேரத்தில் கரோனா தொற்றில் உள்ள 90 விழுக்காடு சிறு துகள்கள் செயலிழந்து அல்லது செத்துபோகின்றன. 99.9 விழுக்காடு துகள்கள் 72 மணி நேரத்துக்குள் செயலிழந்து போகின்றன.
சுடுநீரில் கரோனா வைரஸ் முற்றிலும் இறந்துவிடுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (அதனால்தான் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சுடுநீரில் கழுவ வேண்டும் என்று கூறப்படுகிறது).
குளோரின் தண்ணீர் என்னவெல்லாம் செய்யும்?
குளோரின் தண்ணீரும் கரோனா செயல்பாட்டைக் குறைக்க முற்றிலும் உதவுகிறது. குளோரின் தண்ணீரில் கரோனா பெருகுவது குறைகிறது. இருப்பினும் அதனால் சில காலம் அந்தத் தண்ணீரில் உயிர் பிழைக்க முடியும். தண்ணீரின் வெப்பநிலை கரோனாவின் ஆயுளை தீர்மானிக்க முக்கியக் காரணியாக இருக்கிறது.
இதையும் படிங்க... கோவிட் - 19: உலகின் முதல் தடுப்பூசியை ஆகஸ்ட் மாதம் களமிறக்க தயாராகும் ரஷ்யா