ரஷ்யா நாட்டின் சமாரா பகுதியில் உள்ள ஓல்வி எரிவாயு நிலையம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், பிகினி உடையில் வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச எரிவாயுவை வழங்குவதாக அறிவித்தது. ஆனால், இந்த சலுகை எந்த பாலினத்துக்குச் செல்லுபடியாகும் என்பதைக் குறிப்பிடவில்லை.
இதைப் பயன்படுத்திய ஆண்கள், பிகினி உடையில் ஓல்வி எரிவாயு நிலையத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். சில ஆண்கள் பிகினி உடை மட்டுமின்றி ஹில்ஸ் ஷூ அணிந்து பெர்ஃபெக்ட்டாக வந்திருந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால், எதிர்பார்க்காத அளவிற்கு ஆண்கள் கூட்டம் எரிவாயு நிலையத்திற்கு வரத் தொடங்கினார்கள்.
இந்த எதிர்பாராத திருப்பத்தைப் பார்த்த நிலையத்தின் உரிமையாளர், சலுகை நேரத்தை மூன்று மணி நேரமாகக் குறைத்து விட்டார். இருப்பினும் உள்ளூர், சமூக ஊடகங்களின் கவனத்தைப் பெற இது போதுமானதாக இருந்தது. பிகினி உடையில் மகிழ்ச்சியுடன் ஆண்கள் எரிவாயு நிரப்பும் புகைப்படங்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இதற்கு முன்பு, உக்ரைனில் உள்ள எரிவாயு நிலையம் இதே அறிவிப்பை வழங்கியது. ஆனால், வாடிக்கையாளர்களின் பாலினத்தைக் குறிப்பிடத் தவறிவிட்டது. எதிர்பார்த்தபடி, பிகினி ஆண்கள் இலவச எரிவாயுவைப் பெற அதிக எண்ணிக்கையில் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேய் கண்களைக் கொண்ட குழந்தை - அதிர்ச்சியடைந்த தாய்!