மாஸ்கோ: கடந்த 28ஆம் தேதி அன்று ரஷ்யாவின் பேரன்ட்ஸ் கடல் பகுதியில் 19 பேர் கொண்ட குழு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது நோவாயா ஜெம்ல்யா தீவு பகுதி அருகே எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அந்நாட்டு பேரிடர் மீட்பு குழுவினர் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இருவரை பாதுகாப்பாக மீட்டனர். இதையடுத்து காணாமல் போன 17 பேரை தேடும் பணி மோசமான வானிலை காரணமாக தாமதமானது.
விபத்து நிகழ்ந்து இன்றுடன் மூன்று நாட்களாகியுள்ள நிலையில், காணாமல் போன 17 பேர் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என அந்நாட்டு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கடும் குளிரினால் மின் கலன்களில் பனிக்கட்டி உறைந்ததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. தற்போது கடலில் மூழ்கிய படகின் உடைந்த பகுதிகள் கிடக்கும் கடல் பகுதியில் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: கடலில் மூழ்கிய ரஷ்ய படகு - 17 பேர் மாயம்