உளவுத்துறை அதிகாரியாக இருந்து வந்த விளாடிமிர் புதின் 1999ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ரஷ்யாவின் அதிபராக பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து 2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக அவர் பதவி வகித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு, புதின் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றார். இன்று வரை அவரே அதிபராக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், 2036ஆம் ஆண்டு வரை அவரையே அதிபராக தொடர வைக்க ரஷ்யாவில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தத் திருத்தத்தை சட்டமாக்கும் நோக்கிலான வாக்குப்பதிவு ஜூலை ஒன்றாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த வாக்குப்பதிவு கரோனா பேரிடர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு குறித்த ஆலோசனையை புதின் உயர் அலுவலர்களுடன் மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்குப் பதிவுக்கு புதின் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.