ETV Bharat / international

#Brexit தேர்தலுக்கு நோ சொல்லி போரிஸுக்கு செக் வைத்த எம்.பி.க்கள்! - பிரெக்ஸிட் விவகாரம்

லண்டன்: பிரிட்டனில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த மசோதாவை அந்நாட்டு எம்.பி.க்கள் நிராகரித்துள்ளனர்.

BORIS JOHNSON
author img

By

Published : Sep 5, 2019, 12:52 PM IST

Updated : Sep 7, 2019, 7:21 AM IST

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் அக்கோபர் 31ஆம் தேதி வெளியேறுகிறது. இதனை பிரெக்ஸிட் (Britian + Exit = Brexit) என்று அழைக்கிறார்கள்.

இந்த வெளியேற்றத்தை சுமுகமாக்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் 'பிரெக்ஸிட் விரைவு ஒப்பந்தம்' போட்டுக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் எம்.பி.க்களின் ஆதரவைப் பெறமுடியாத காரணத்தால், பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரெசா மே தன் பதவியை கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பிரெக்ஸிட்டை முடித்துவைக்கத் தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளரான போரிஸ் ஜான்சனை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பிரதமராக தேர்ந்தெடுத்தது. ஆனால், பிரிட்டன் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட் ( No deal Brexit) நடவடிக்கைகளை போரிஸ் ஜான்சன் மேற்கொண்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனிடையே, பிரெக்ஸிட் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டியுள்ளதாக் கூறி பிரிட்டன் நாடாளுமன்றத்தின் செப்டம்பர் கூட்டத்தொடரை ஒருமாதம் முடக்குவதாகப் பிரதமர் போரிஸ் ஜான்சன் சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்திருந்தார். பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்த முடிவு அந்நாட்டு எம்.பி.க்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட்டை தடுக்கும் எம்.பி.க்கள் முயற்சியைத் தடுக்கவே பிரதமர் இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

பெரும்பான்மையை இழந்த அரசு

இதையடுத்து, கோடை விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை பிரிட்டன் நாடாளுமன்றம் கூடியது. அப்போது, SO24 (Standing Order 24) சட்டத்தின் கீழ் பிரெக்ஸிட் விவகாரம் குறித்து அவசரக் கூட்டத் தொடரை உடனடியாகக் கூட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் தீர்மானம் தாக்கல் செய்தார்.

இதற்கு, ஆதரவாக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி.க்கள் 21 பேர் உள்பட 328 எம்.பி.க்களும், அதனை எதிர்த்து 301 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

இது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ஃப்ளிப் லீ என்ற எம்.பி., லிபரல் டெமாக்கிரேட்ஸ் கட்சிக்கு தாவியதால் போரிஸ் ஜான்சன் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

பிரெக்ஸிட் அவசரக் கூட்டத்தொடர்:

  • நோ டீலுக்கு நோ சொன்ன எம்.பி.க்கள்!

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தீர்மானத்தின்படி புதன்கிழமை (செப். 4) பிரெக்ஸிட் அவசரக் கூட்டத்தொடர் கூடியது. காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, ஒப்பந்தமில்லா பிரெக்ஸிட்டை தடுக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு 327 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 299 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

பிரிட்டன் நாடுமன்றம் ட்வீட், britian parliament tweet, hoc tweet
பிரிட்டன் நாடாளுமன்றம் ட்வீட்
  • விரைவுத் தேர்தல் ரத்து

இதையடுத்து, அக்டோபர் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிரிட்டனில் தேர்தல் நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்தார்.

பெரும் சலசலப்புக்கு இடையே இந்த தீர்மானத்திற்கு 298 பேர் ஆதரவாகவும், 56 பேர் எதிராகவும் வாக்களித்தனர். எனினும், பிரிட்டன் நாடாளுமன்ற சட்டப்படி (Fixed-term Parliaments Act, 2011) பெரும்பான்மை இலக்கை எட்டத் தவறியதால் இந்த மசோதா தோல்வியில் முடிந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கார்பின் உரை

இது பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டிப்பாக பிரெக்ஸிட் ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பிரெக்ஸிட் எந்தத் திசையில் செல்லப்போகிறது என்ற குழப்பம் பிரிட்டனை சூழ்ந்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் உரை

Intro:Body:Conclusion:
Last Updated : Sep 7, 2019, 7:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.