சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருள்கள் சரக்கு விண்கலம் மூலம் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ரஷ்யாவில் கஜகஸ்தான் பகுதியில் உள்ள பைக்கோனூர் காஸ்மோட்ரோம் விண்வெளி நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு தேவையான சரக்குகளை விண்கலம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. அதில், எரிபொருள், நீர், உணவு உள்ளிட்ட மூன்று டன் எடை கொண்ட சரக்குகள் உள்ளன. இந்த சரக்கு விண்கலம் டிசம்பர் மாதம் வரை சர்வதேச விண்வெளி நிலையத்திலே மையம் கொண்டிருக்கும்.
மேலும், ஜெர்மனியின் எல்பே ஆற்றில் நடைபெற்ற அமெரிக்கா, சோவியத் படைகளின் சந்திப்பின் 75ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக விண்கலத்தில் 75 என்ற எண்ணும் அச்சடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இழப்பைச் சந்தித்துள்ள இந்திய விமான சேவை நிறுவனங்கள்