உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசி உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
இதில் முக்கிய நகர்வாக ரஷ்யாவில் கரோனா தடுப்பூசி மனித பரிசோதனை என்ற கட்டத்தை தற்போது தாண்டியுள்ளது.
ஆய்வுக் கூடங்களில் தயாரிக்கப்பட்ட பரிசோதனை தடுப்பூசி மருந்துகளை, மனிதர்களிடம் செலுத்திப் பார்த்து அதன் விளைவுகள் சாதமாக உள்ளதா என்று சோதித்துப் பார்ப்பதே ஹூமன் ட்ரெயல்ஸ் என்ற மனிதப் பரிசோதனையாகும்.
இந்தக் கட்டத்தை உலகளவில் முதல்முறையாக ரஷ்யா வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்நிலையில், “பரிசோதனை நிறைவடைந்து தடுப்பூசி பாதுகாப்பானதாக உள்ளது, பரிசோதனை மேற்கொண்டவர்கள் ஜூலை 20ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்” என தலைமை ஆராய்ச்சியாளர் எலெனா ஸ்மோல்யார்சுக் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இதுவரை 7 லட்சத்து 19 ஆயிரத்து 449 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 ஆயிரத்து 188 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் இதுவரை 21 தடுப்பூசி பரிசோதனைகள் உலக சுகாதார மையத்தால் முக்கியமானதாகக் கருதப்பட்டு கவனிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: அமிதாப் பச்சன் விரைவில் மீண்டு வரவேண்டும் - நேபாள பிரதமர்