கரோனா வைரஸ் காரணமாக இதுவரை 42 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 332 பேர் உயிரிழந்தனர். இந்த கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்தக் காலத்தில் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதோடு, பல்வேறு நாடுகளின் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை சந்தித்தன. இதனை சரி செய்வதற்கு பல வருடங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலைப் பிரிவு தலைவர் மைக் ரியான் பேசுகையில், '' கண்ணை மூடிக்கொண்டு கார் ஓட்டுவது என்பது தான் நான் பார்த்திலேயே மிகவும் வேடிக்கையான சம்பவம். தற்போது பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவது அதைத்தான் காட்டுகிறது இது கரோனா வைரஸ் பரவலை இன்னும் வேகமாக்கும் நடவடிக்கை. இந்த நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள்'' என்றார்.
இதையும் படிங்க: செய்தியாளருடன் வாக்குவாதம்; இடையிலேயே கிளம்பிய டிரம்ப்...!