லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு ஓரிரு நாள்களாக லேசான காய்ச்சல், சளி அறிகுறிகள் இருந்தன. இதனால் ராணி கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவில் ராணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து பக்கிங்காம் அரண்மனை தரப்பில், "இரண்டாம் எலிசபெத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ராணி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
வரும் நாள்களில் வின்சர் மாளிகையிலிருந்து அரச பணிகளை மேற்கொள்வார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் ஐந்து நாள்களுக்கு தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு உள்ளது. இந்த கட்டுப்பாடு ராணிக்காக நீக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மூன்று டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர். அவருக்கு வயது 95. அவரது மூத்த மகன் இளவரசர் சார்லஸ்(73), மனைவி காமிலா(74) இருவருக்கும் அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரண்டாம் எலிசபெத் மகாராணியிடமிருந்து மாணவிகளுக்கு கிடைத்த கடிதம்