ETV Bharat / international

'பெருமையாக உள்ளது, அதே சமயம் பயமாகவும் உள்ளது' - செவிலியரின் தந்தை

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் தனது மகனைப் பாராட்டியது பெருமையாக இருந்தாலும், எங்கு வைரஸ் தொற்று தன் மகனைத் தாக்கக்கூடுமோ என்ற அச்சம் உள்ளதாக லூயிஸின் தந்தை கூறியுள்ளார்.

author img

By

Published : Apr 16, 2020, 9:48 AM IST

Boris Johnson
Boris Johnson

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சில நாள்களில் அவரின் உடல்நிலை மேலும் மோசமானதால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். சிகிச்சை முடிந்து சில நாள்களுக்கு முன்புதான் அவர் வீடு திரும்பினார்.

அப்போது பேசிய பிரமதர் போரிஸ் ஜான்சன், தேசிய சுகாதார சேவை பிரிவின் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

குறிப்பாகத் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்தபோது தன்னை பத்திரமாகக் கவனித்துவந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜென்னி என்ற செவிலியரையும், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் என்ற செவிலியரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.

லூயிஸ் குறித்து அவரது தந்தை பிடாமர் கூறுகையில், "போர்ச்சுகல் நாட்டில் பல வேலைகளுக்கு எனது மகன் முயற்சித்தான். இருப்பினும் அங்கு அவனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.

இதனால் 2014ஆம் ஆண்டு அவன் பரிட்டன் சென்றான். லண்டன் மாநகரிலுள்ள செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவின் செவிலியராக 2016 முதல் பணியாற்றிவருகிறான்.

பிரிட்டன் பிரதமர் எனது மகனின் சேவையைப் பாராட்டினார். அதேபோல போர்ச்சுகல் நாட்டின் அதிபரும் எங்களைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பாராட்டினர். இவை அனைத்தும் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

எனது மகனைப் போலப் பலர் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முன்னணியிலிருந்து போராடிவருகின்றனர். அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்மும் எனக்கு இருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: ஈக்வடாரில் வீதியில் வீசியெறியப்படும் உடல்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.