ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் உரிமை தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "ஆப்கானில் வாழும் பெண்கள், சிறுமிகள் நிலைமை பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. அவர்களை கல்வி, வேலை. சுதந்திரம் ஆகியவை குறித்து கவலை தரும் சூழல் உருவாகியுள்ளது.
ஆப்கான் பெண்களும், சிறுமிகளும் பாதுகாப்புடன், கண்ணியத்துடன் வாழ உரிமை கொண்டவர்கள். அவர்கள் மீது வேற்றுமையோ, வன்முறையோ ஏவப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உதவி செய்யவும், அவர்களின் குரலை கேட்கவும் சர்வதேச சமூகம் தயாராக உள்ளது.
அங்குள்ள பெண்கள், சிறுமிகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாக வழங்கப்பட்ட உரிமை, பாதுகாப்பு ஆகியவை வழங்கப்படுகிறதா என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்" என தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டறிக்கையில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
இதையும் படிங்க: பாகிஸ்தான் டிக்-டாக் பெண்ணுக்கு எதிர்ப்பு - உடைகளை கிழித்து மானபங்கம்