கரோனா வைரஸிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடி வருகின்றனர். இந்தக் இக்கட்டான சூழ்நிலையில் பல மருத்துவர்களுக்கு கரோனா தொற்று பரவி உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் கரோனாவுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் தேசிய சுகாதாரத் துறை(NHS) ஊழியர்களை பாராட்டுவதற்காக அன்மர் ஹாலில் தங்கியிருக்கும் இளவரசர் வில்லியம் தனது மனைவி, குழந்தைகளுடன் வீட்டிற்கு வெளியே நின்று கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.
அதுமட்டுமின்றி, நியூரியில் உள்ள டெய்ஸி ஹில் மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களைப் பாராட்டும் விதமாக பேருந்துகளை அணிவகுப்பாக நிறுத்தி ஒலிப்பெருக்கி பொத்தானை அழுத்தி ஓட்டுநர்கள் தங்களது நன்றியை தெரிவத்தனர்.
இதையும் படிங்க: கரோனா பீதி: துபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்ட இந்தியரின் சடலம்!