ETV Bharat / international

'ட்ரம்ப்பிற்கு மெகா சைஸ் புகைப்படத்தை பரிசளித்த மோடி!'- என்ன படத்தைத் தந்தார் தெரியுமா? - Prime Minister Modi's souvenir for Trump

7 நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஐநா தலைமையகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பெரிய அளவிலான புகைப்படத்தை நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார்.

Prime Minister Modi's souvenir for Trump
author img

By

Published : Sep 25, 2019, 10:50 AM IST

ஏழு நாட்கள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐநா பொதுச்சபையின் 74ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் நகரின் ஐநா தலைமையகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து உரையாடினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, ட்ரம்ப்பிற்கு பெரிய அளவிலான புகைப்படம் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார். ஹூஸ்டனில் நடந்த, 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பாக மேடையில் ட்ரம்ப்பும் - மோடியும் ஒன்றாகக் கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தைத் தான், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

மற்றவர்களை அசர வைத்து மோடி, ட்ரம்புடன் செல்ஃபி எடுத்த சிறுவன்!

Intro:Body:

டிரம்பிற்கு பிரதமர் மோடி நினைவு பரிசு

நியூயார்க்: 7 நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி , ஐ.நா. பொதுச்சபை 74-ம் ஆண்டு பொதுகூட்டத்தில் பங்கேற்றார்.இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி நியூயார்க் நகரின் ஐ.நா.தலைமையகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம் பாதுகாப்பு , பயங்கரவாதம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.தொடர்ந்து பிரதமர் மோடி , டிரம்ப்பிற்கு மெகா சைஸ் புகைப்படம் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார். ஹூஸ்டனில் நடந்த ஹவ்டி, மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பாக மேடையில் டிரம்ப்பும் -மோடியும் ஒன்றாக கைகோர்த்து நிற்கும் மெகா சைஸ் புகைபடத்தை தான் பிரதமர் மோடி , டிரம்பிற்கு நினைவு பரிசாக வழங்கினார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.