கோவிட்-19 தொற்றுக்கு இதுவரை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தடுப்புமருந்து உருவாக்கப்படவில்லை. அதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
அதேநேரம், இது புதுவிதமான வைரஸ் தொற்று என்பதால் இந்தக் கோவிட்-19 குறித்து கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளவும் ஆராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ஜெர்னல் சயின்ஸ் என்ற இதழில் கோவிட்-19 குறித்து புதிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "சாதாரண சளியை ஏற்படுத்தும் கரோனா தொற்றின் ஆன்ட்டிபாடிகள்கூட கோவிட்-19க்கு எதிராக செயல்படுகிறது. குறிப்பாக குழந்தைகளிடம் இருக்கும் சாதாரண சளியை ஏற்படுத்தும் கரோனாவின் ஆன்ட்டிபாடிகள் கோவிட்-19க்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.
ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்பதற்கு தெளிவான காரணங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதைக் கண்டுபிடிக்க கூடுதல் ஆய்வுகள் தேவை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 முதல் 2018ஆம் ஆண்டு வரை சேமிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளது. மேலும், குழந்தைகள் கரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்படாமல் இருக்க இது காரணமாக இருக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கிற்கு ஒப்புதல் அளித்த இங்கிலாந்து எம்பிக்கள்!