கோவிட்-19 பரவலுக்கு பின் இத்தாலி நாட்டை விட்டு வேறு வெளிநாடுகளுக்கு போப் பிரான்சிஸ் பயணம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், தனது வெளிநாட்டு பயணம் குறித்த அறிவிப்பை போப் ஆண்டவர் தற்போது வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வாட்டிகன் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது உலகம் சுகாதார அவசர நிலையைச் சந்தித்துவருகிறது. இப்படி இருக்கும் சூழலில் மேம்படும் என்ற நம்பிக்கையில் வரும் மார்ச் 5 முதல் 8ஆம் தேதிவரை ஈராக் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஈராக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பயங்கரவாதம், மோதல் காரணமாக மோசமான விளைவுகளை சந்தித்துள்ளன. அங்கு அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக போப் பிரான்சிஸ் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸின் இந்த வருகையை வரவேற்று ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிஹ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கிறித்துவ மதத்தின் தலைமை பொறுப்பில் உள்ள போப் 2019ஆம் ஆண்டில் இஸ்லாமிய நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரேபிய தீபகற்ப நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேஸ்புக் 2020 தேடல்: கமலா ஹாரிஸ் வெற்றி முதல் ஜார்ஜ் ஃப்ளாய்ட் வரை!